பெஷாவர்: இன்று பாகிஸ்தானில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகப் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் வெடி குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 80 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் பயணமாக வந்து சென்ற நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்வாகும். இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிக்ச்சை அளித்து வருகின்றனர், வடமேற்கு மாகாண அதிகாரிகள் கூறும்போது 200க்கும் மேற்பட்டவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இத்தாக்குதலில் இதுவரை 87 பேர் பலியாகி இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக் குண்டு வெடிப்பில் மக்கள் நடமாட்டம் நிறைந்த மீனா பஜாரில் உள்ள ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் மசூதி ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கட்டிடங்களில் இருந்த சன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாகவும் மேலும் 15 கடைகளும் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் எரிந்து நாசமாயின. என்றும் பாக். செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. இதன் வெடிச்சத்தம் பெஷாவர் நகரம் முழுக்க கேட்டதாகவும் இந்த வணிகப்பகுதியில் இருந்தவர்களில் அதிகமானோர் பெண்களே என்று ஒரு பெண்மணி கூறினார் இத்தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட புகை மண்டலத்தில் அதிர்ச்சியடைந்த மீண்டு பாதுகாப்பு அதிகாரிளுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுனர். மேலும் 25 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தாக்குதலுக்கு பிறகு பெஷாவரில் உள்ள அனைத்து வணிக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன அதிபர் சர்தாரி வடமேற்கு மாகாண முதல்வரிடம் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்
பெஷாவரில் குண்டு வெடிப்பு; 87 பேர் பலி!
10/29/09
Labels:
India news.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment