http://i50.tinypic.com/29mlkww.jpg
Showing posts with label India news.. Show all posts
Showing posts with label India news.. Show all posts

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நரசிம்மராவ் முயற்சித்தார் : திடுக் தகவல்

1/14/10



புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த லிபரான் கமிஷன் நீண்ட காலத்துக்கு பின் பாஜக தலைவர்கள் 68 பேர் குற்றம் சாட்டியது. ஆனால் நரசிம்மராவின் பெயர் இப்பட்டியலில் இல்லாதது பலத்த விமர்ச்னத்துக்குள்ளானது. இச்சூழலில் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு பின்னர் அவ்விடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் திட்டங்கள் தீட்டினார் என பிரதமர் அலுவலகத்தில் துணைச்செயலாளராகவும் நரசிம்மராவின் ஆலோசகராகவும்(தகவல் ஆலோசகர்) பணியாற்றிய ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.வி.ஆர்.கே பிரசாத் குறிப்பிட்டார்.

”உண்மையில் என்ன நிகழ்ந்தது” (அசலு எமி ஜரிகின்டன்டே?)என்று பெயரிடப்பட்ட தெலுங்கு மொழியிலான இப்புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது..ராமர்கோவில் கட்டுவதற்கான நரசிம்மராவின் விருப்பத்தைக்குறித்து இப்புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்களில் பிரசாத் எழுதியுள்ளார்.1992 டிசம்பர் 6 க்குப்பிறகு இரண்டு வருடத்தில் தனது லட்சியத்தைப் பூர்த்திச்செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார்.அதற்காக அரசியல் சார்பற்ற ட்ரஸ்ட் ஒன்றையும் துவக்கினார்.ஆனால் தேர்தலில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால் ராமர்கோவில் கட்ட இயலவில்லை.நரசிம்மராவ் மீண்டும் பிரதமராக பதவியேற்றிருந்தால் ராமர்கோவிலை கட்டியிருப்பார்,

மேலும் இந்நூலில் பிரசாத் 1993 ஆம் ஆண்டு நான்கு வட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபொழுது நரசிம்மராவ் தன்னோடு உரையாடிய உரையாடலின் விபரங்களையும் நினைவுக்கூறுகிறார்.அந்த தேர்தலில் பா.ஜ.க வின் முக்கிய பிரச்சாரமே ராமர்கோவில் கட்டுவதைப்பற்றிதான்.இந்நிலையில் ராவ் கூறினார்,”ராமனின் காப்புரிமையை பா.ஜ.க எவ்வாறு உரிமைக்கொண்டாட இயலும்?”பா.ஜ.க வுடன் நாம் போட்டியிடலாம்.ஆனால் ராமனோடு எவ்வாறு போட்டியிட இயலும்? என்ற நரசிம்மராவின் வார்த்தைகளை இந்நூலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read more...

விமானக் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை-மத்திய அரசு பரிசீலனை


விமான போக்குவரத்து பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் கலந்து கொண்டனர். விமான கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்க மத்திய அமைச்சர்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


Read more...

சொராபுதீன் போலி என்கௌண்டர் - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு




கடந்த 2005 ம் ஆண்டில் குஜராத்தை சேர்ந்த சொராபுதீன் , அவருடைய மனைவி கௌசர் பீ மற்றும் அவர்களது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரை குஜாராத் மாநில காவல் துறை போலி என்கௌண்டர் நடத்தி சுட்டுக் கொன்றனர் . குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொள்ள வந்ததாகவும் அதன் காரணமாக அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் கூறப் பட்டது .

இது போலியான என்கௌண்டர் என்று விசாரணையில் தெரிய வந்ததையடுத்து சம்பவத்துக்கு பொறுப்பான தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் டி.ஜி.வஞ்சாரா, போலீஸ் கண்காணிப்பாளர்கள் ராஜ்குமார் பாண்டியன், எம்.என்.தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மேல் வழக்குப் பதிவு செய்யப் பட்டு பின் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.


இந்த வழக்கில் விசாரணை நேர்மையாக நடைபெற வில்லை என்றும் அதன் காரணமாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சொராபுதீனின் சகோதரர் ரூபாபுதீன் ஷேக் மனு தாக்கல் செய்து இருந்தார் . இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி மற்றும் அப்டாப் ஆலம் ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது . வழக்கு விசாரணையை பாரபட்சம் இல்லாமல் நடத்திவருவதாக கூறி வரும் குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெருத்த பின்னடைவாக கருதப் படுகிறது .

inneram.com


Read more...

அசாருதீன் மீதான ஆயுட் கால தடையை நீக்கக் கோரிக்கை

11/23/09



காங்கிரசை சேர்ந்த சிலர் ஐசிசி யின் துணைத் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவாரை சந்தித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மீதான ஆயுட்க்கால தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



கடந்த 2000 ஆண்டில் எழுப்பப் பட்ட கிரிக்கெட் சூதாட்டப் புகார் காரணமாக அசாருதீன், ஷர்மா மற்றும் ஜடேஜாவுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப் பட்டது. சில வருடங்கள் கழித்து ஜடேஜாவின் தடை விலக்கிக் கொள்ளப் பட்டது.

கடந்த தேர்தலில் அசாருதீன் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி க்கள் ஜிதின் பிரசாத் , ராஜ் பப்பர், இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரிய நிதிக் குழுவின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் சுக்லா போன்றோர் சரத் பவாரை சந்தித்து அசாருதீன் மீதான தடையை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளனர்.


Read more...

கேரளாவில் துப்பாக்கிச் சூடு்; கலவரம் - இருவர் பலி

11/18/09


காஸர்கோடு: முஸ்லீம் லீக் மாவட்ட கமிட்டியின் தலைமையில் காஸர்கோடு புதிய பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில தலைவர்களுக்கான வரவேற்பு அளிக்கும் பொதுக்கூட்டத்திற்கிடையே ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவரும், பாரதீய ஜனதாவைச் சார்ந்தவார்களின் கத்திக்குத்தில் இன்னொருவரும் மரணமடைந்தனர்.

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் முஸ்லீம் லீக் கட்சியினரைத் தாக்கினர். இதில் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். மாவட்ட காவல்துறைக் கன்காணிப்பாளர் உள்ளிட்ட 20 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்களுக்கும், வியாபார நிறுவனங்களும் கல் வீச்சுக்கு இரையாயின.


ஷஃபீக்(வயது 22) என்பவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த முஹம்மது அஸ்ஹர் (வயது 21) பா.ஜ.க குண்டர்களின் கத்திக்குத்தில் பலியானார். பா.ஜ.க வினர்தான் அஸ்ஹரை கொன்றதாக காவல்துறை கூறியுள்ளது. முனீர்(வயது 23), அஷ்ரஃப்(வயது 28), ஸைனுத்தீன்(வயது 26), முனீர்(வயது 35) ஆகியோரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். கடுமையான காயம் ஏற்பட்டுள்ள முனீர் மங்களூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பா.ஜ.க வினர்தான் இவர்களை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

அமய் ரோட்டிலிலுள்ள ஸலஃபி சென்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சில் பள்ளிவாசலின் கதவுகளும், ஜன்னல்களும் தகர்ந்தது. போலீசாரால் சுடப்பட்ட ஷஃபீக்கிற்கு நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. 3 மாதத்திற்கு முன்புதான் இவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார் என்று கூறப்படுகிறது.

காஸர்கோடு பழைய ப்ரஸ் கிளப் ஜங்சனில் போலீசிற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளவந்த தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததாகவும், வன்முறையைத் தொடர்ந்து காவலர்கள் மீது கல்வீச்சு நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவலர்கள், பின்னர் தொண்டர்களை நோக்கி நேராக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறையத்தொடர்ந்து காஸர்கோடு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் 2 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.


Read more...

மாணவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்: ரூ.1 இலட்சம் நஷ்டஈடு

11/15/09


பள்ளி மாணவர் ஒருவரை நிர்வாணப்படுத்தி அவரை ஊர்வலமாகச் செல்ல உத்தரவிட்ட ஆசிரியருக்கு 1 இலட்சம் ரூபாய் அபாரதம் விதித்து டில்லி நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்த ஒரு மாணவன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துவிட்டான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் அந்த மாணவனை அடித்து உதைத்தார். மேலும் இரக்கமற்ற முறையில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தி கொடூரமாக நடந்து கொண்டார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து மாணவர் கவுன்சில் சார்பில் டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் குப்தாவுக்கு ஒருவருட ஜெயில் தண்டனையும், 2,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியிருந்தார். அத்தீர்ப்பை எதிர்த்து டில்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 12 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் சனிக்கிழமையன்று தீர்ப்பு கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பி.சி. குப்தா ரூ.1 இலட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி பிரதீபா ராணி உத்தரவிட்டார். மேலும், கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர் குப்தாவுக்கு கண்டனமும் தெரிவித்தார்.



Read more...

மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்ட பணி ஆரம்பம் : மாவட்ட நிர்வாக எல்லைகளை மாற்ற அரசு தடை!




சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், பணியைத் துவக்க மாநில அரசு தயாராகி விட்டது. தமிழகத்தில் தற்போதுள்ள நிர்வாக எல்லைகள் மற்றும் அலகுகளை முடக்கிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதிய மாவட்டங்கள், தாலுகாக்கள், நகராட்சி, கிராமங்கள், போலீஸ் நிலையங்கள், ஒன்றியங்கள், உபகோட்டங்கள் உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



வரும் 2011ம் ஆண்டு, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசு கடந்த மே மாதம் 13ம் தேதி உத்தரவிட்டது. மத்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் சென்சஸ் கமிஷனர், பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே, 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் சோதனை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பிரதான கணக்கெடுப்புப் பணியின் முதல் கட்டப் பணி, நாடு முழுவதும் வரும் 2010 ஏப்ரல் மாதம் துவங்கும். அதாவது, வீடுகள் மற்றும் குடியிருப்புகளை பட்டியலிடும் பணி துவக்கப்படும்.



இதன்பின், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, வரும் 2011 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். இந்த கணக்கெடுப்புப் பணி முழுமையாக அனைத்து பகுதிகளும் அடங்கும் வகையில், அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாக அமைப்புகளுக்கு உட்பட்டு, நாடு பல்வேறு சிறு கணக்கெடுப்பு ஒன்றியங்களாக பிரிக்கப்படும்.இவ்வாறு கணக்கெடுப்பு ஒன்றியங்களில் எல்லைகளை குறியிடும் பணி, வீடுகளை பட்டியலிடும் பணிக்கு முன்னதாக துவக்கப்படும். அவை, மக்கள் தொகை வரைபடத்தில் குறியிடப்படும். இதன்மூலம், ஒரே பகுதி வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது அல்லது விடுபடுவது தவிர்க்கப்படும்.எனவே, கணக்கெடுப்பு ஒன்றியங்களை குறியிட்ட பின், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முடியும் வரை, நிர்வாக அமைப்புகளில் எவ்வித மாற்றமும் இருக்கக் கூடாது.



எனவே, தற்போதுள்ள நிர்வாக அமைப்புகளில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால், அதை 2010 ஜனவரி முதல் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டுமென, சென்சஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.எனவே, தற்போதுள்ள நகராட்சிகள், வருவாய் கிராமங்கள், தாலுகாக்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், ஒன்றியங்கள், உபகோட்டங்கள், மாவட்டங்கள் போன்றவற்றின் எல்லைகளை மாற்றியமைக்கும் திட்டங்கள் ஏதாவது இருந்தால், அதை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகத்துக்கும், இந்திய பதிவாளர் ஜெனரலுக்கும், டிசம்பர் 31ம் தேதிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்பின், நிர்வாக எல்லைகளில் எவ்வித மாறுதலும் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதை ஏற்று, தலைமைச் செயலர் ஸ்ரீபதி பிறப்பித்துள்ள உத்தரவில், "தற்போதுள்ள நிர்வாக அலகுகள், எல்லைகள் முடக்கப்படுகின்றன. மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், நகராட்சிகள், ஒன்றியங்கள், உபகோட்டங்கள் போன்றவற்றை புதிதாக உருவாக்க, 2010 ஜனவரி முதல் தேதியில் இருந்து 2011 மார்ச் 31ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.வருவாய் நிர்வாக ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., ஊரக வளர்ச்சித் துறை கமிஷனர், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சிகள் இயக்குனர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், பத்து மாநகராட்சிகளின் கமிஷனர்கள், அரசின் இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் எவ்வித மாற்றங்களும் செய்வதற்கான பரிந்துரைகளை அனுப்பக் கூடாது என்றும், தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.



Read more...

நோக்கியா, சீமென்ஸில் 5,000 பணியாளர் குறைப்பு!

11/4/09


முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான நோக்கியா மற்றும் சீமென்ஸில் 5,000 பணியாளர்கள் குறைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

நோக்கியா - சீமென்ஸ் நெட்வார்க்கில் உலகம் [^] முழுக்க 64000 பணியாளர்கள் உள்ளதாகவும், இவர்களில் 7 முதல் 8 சதவிகித ஊழியர்கள் நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் நிலையில் சற்று முன்னேற்றம் தெரிந்தாலும், செலவுக் குறைப்பு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த முடிவை மேற்கொண்டதாக நோக்கியா அறிவித்துள்ளது.

வரும் 2011-ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் யூரோ அளவுக்கு செலவுக் குறைப்பு செய்ய வேண்டியுள்ளதாம் இந்த நிறுவனங்கள். இந்த ஆண்டு 550 யூரோ அளவுக்கு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனவாம்.


Read more...

மோடிக்கு பன்றிக்காய்ச்சல்! பீதியில் தொழிலதிபர்கள்

11/3/09




அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது, வியாழனன்று அவரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பபட்டு இருந்தது சோதனையின் முடிவில் அவ்ருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளதாக நேற்று காலை குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே அவருடன் மாஸ்கோ சென்ற பெரும் தொழிலதிபர்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து குஜராத் மந்திரி சபையில் கடந்த வியாழனன்று முதல்வர் மோடியுடன் மூன்று மணி நேர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஒரு அமைச்சர் கூறும்போது மோடிக்கு பன்றிக்காய்ச்சல் என்ற சந்தேகமான நிலையில் அவர் இந்த அமைச்சரவை கூட்டத்தை நடத்தி இருக்ககூடாது பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும் என்றார்.எனினும் குஜராத் அரசு இதை இன்னும் உறுதிபடுத்த மறுத்துவிட்டது முதல் சோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில் நேற்று மாலை மீண்டும் மற்றொரு மாதிரி சோதனக்கு அனுப்பப்பட்டுள்ளது இந்நிலையில் மோடி அரசு ஏற்கனவே மோடிக்கு பன்றிக்காய்ச்சல் தாக்குதலை மறைப்பதற்காக அந்த மாதிரியை ரமேஷ் என்பவரின் பெயரில் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
source:inneram

Read more...

லவ் ஜிஹாத் என்றொரு இயக்கம் இல்லை - கேரள டி.ஜி.பி!

10/31/09



"லவ் ஹிஜாத் என்றொரு இயக்கம் கேரளத்தில் செயல்படவில்லை" என கேரள டி.ஜி.பி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இரு பெண்கள் தொடர்புடைய வழக்கில், அவர்களின் கணவர்கள் முன் ஜாமீன் கேட்டு பதிவு செய்த மனுவினைத் தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம், "கேரளத்தில் லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு செயல்படுகிறதா? அதற்கு வெளிநாட்டு தொடர்புகள் உண்டா? தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உண்டா? கள்ளக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் முதலான சமூக விரோத செயல்களில் அதற்கு பங்குண்டா?" என்பது உட்பட விரிவாக விசாரணை நடத்தில் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கேரள டிஜிபி, தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "லவ் ஜிஹாத் என்றொரு அமைப்பு கேரளத்தில் செயல்படுவதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை"எனவும் "அவ்வாறான ஒரு இயக்கம் கேரளத்தில் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இஸ்லாமிய மதத்திற்கு மற்ற மதத்திலிருந்து பெண்களை மதம் மாற்றும் செயல் நடைபெறுகிறதா? என்பதைக் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது" என்றும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
source:inneram


Read more...

நான் கிரிக்கெட் வீரன், பயங்கரவாதி அல்ல- பர்வேஸ் ரசூல்



கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்த பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல், "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க வந்துள்ளேன், பயங்கரவாதியல்ல" என்று கூறியுள்ளார்.
சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியில் கலந்து கொண்டது.
கடந்த 17 அக்டோபர் 2009 அன்று, இந்த அணியினர் தங்கியிருந்த அறையில் புகுந்த கர்நாடகா காவல்துறை, ஜம்மு காஷ்மீர் அணியினரின் பைகளைச் சோதனை செய்தது. இதில், இருவரின் பைகளிலிருந்து சந்தேகத்திற்கு இடமான சப்தம் வந்தது எனக் கூறி, அவர்களைக் கைது செய்தது. இதற்கு பல தரப்புகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தவறான தகவல்களின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து விட்டதாக கூறி கர்நாடகா காவல்துறை இருவரையும் விடுவித்தது.
இதில் ஒருவரான பர்வேஸ் ரசூல்,ஜம்மு காஷ்மீர் அணிக்காக 3ஆம் நிலையில் களமிறங்கி 49 பந்துகளில் 50 ரன்களை அடித்து, தன் மீது சுமத்தப்பட்ட சந்தேகக்கணைக்குப் பெங்களூர் ஸ்டேடியத்திலேயே பதிலளித்தார். அவர் 50 ரன்களை எடுத்தபோது பர்வேஸ் ரசூலை பாராட்ட பெவிலியனில் அணி முழுதும் திரண்டு எழுந்து நின்று கரகோஷம் செய்தது. பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசிய போது, "நான் ஒரு கிரிக்கெட் வீரன் என்பதை நிரூபிக்க விரும்பினேன்; பயங்கரவாதியல்ல, நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறோம்" என்றார்."அன்று இரவு என்னால் தூங்கமுடியவில்லை, என்ன நடந்தது என்பது பற்றி நான் ஆச்சரியமடைந்தேன். இதனால் இங்கு கிரிக்கெட் விளையாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர்கள் என்னை கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்துமாறு கூறினர்" என்று தான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேளையில் தன் நிலைமையினைக் குறித்து கூறினார்.
இதே போன்ற எண்ணம் ஜம்மு காஷ்மீர் அணிப் பயிற்சியாளர் அப்துல் கயூமிற்கும் ஏற்பட்டது. "நானும் கிரிக்கெட் அணியை முதலில் இங்கிருந்து அழைத்துச் சென்று விடவேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்போது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இந்த விஷயத்தை தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதால் இங்கு தங்க முடிவு செய்தோம்.நாங்கள் காஷ்மீரி என்பதாலும், நாங்கள் சந்தித்து வரும் கடின காலங்களாலும், எங்கு சென்றாலும் எங்களை சந்தேகிக்கின்றனர். அடுத்ததாக மும்பை சென்று அங்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்கிறோம்; அங்கும் இதனால் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுவோம" என்று வருத்ததுடன் கூறியுள்ளார்
கயூம் பெங்களூர் காவல்துறையின் இந்த கைதை கண்டித்து போட்டியின் போது காஷ்மீர் வீரர்களை எதிர்ப்பின் அடையாளமாக கறுப்புத் துணியைக் கையில் கட்டிக் கொண்டு ஆடுமாறு பயிற்சியாளர் கயூம் அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
"காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது என்று நாம் தொடர்ந்து கூக்குரலிட்டு வருகிறோம் .ஆனால் காஷ்மீரிகளை இந்தியர்களாக, குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களை இந்தியர்களாக நாம் மதிக்கவில்லை என்பதையே இது போன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன" என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்."
மாநிலத்தின் அணியில் பங்குகொண்ட ஒரு வீரருக்கே இந்தியாவில் இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்றால் காஷ்மீரில் வாழும் சாதாரண முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை" என விமர்சகர்கள் கர்நாடகா அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
source:inneram


Read more...

Chidambaram's 'final warning' to Pak: Stop sending terrorists



In a very strongly worded speech, Home Minister P Chidambaram has issued what he called a final warning to Pakistan.

Speaking at a public meeting in Madurai, the Home Minister said if Pakistan tries to send terrorists into India again, India would give a crushing response.

"I've been warning Pakistan every time, to not play with us again and to stop with the Mumbai game. I'm warning Pakistan for the last time. If Pakistan attempts to send terrorists into India again, India will not only foil those attempts but also give them a crushing response," said Chidambaram.

Earlier, Army commander Northern command Lt Gen B S Jaswal had said that the morale of Pakistani army is very low and hence it is resorting to ceasefire violations to facilitate infiltration.


Read more...

Terrorism in Pak affecting cricket: Tharoor



Minister of State for External Affairs Shashi Tharoor has suggested that terrorism in Pakistan has been affecting cricket, and hence, any series between India and Pakistan should be organised at a neutral venue - like the USA.

At an event on Saturday, Tharoor said that ever since the attack on the Sri Lankan team in Pakistan, the neighbouring country's cricketing relations with all cricket-playing nations have been strained.

"Because of the terror situation at home, no country is willing to play in Pakistan irrespective of our reasons," Tharoor said, adding, "After the attack on the Sri Lankan team, no sportsman feels sufficiently safe in Pakistan."

Suggesting USA as neutral venue, Tharoor said, "In the television era it really does not matter where the match is being played, as long as you can watch it on your idiot box at home."


Read more...

Jaipur fire destroys Rs 1000 crore, ruins lives



The massive fire at Jaipur's Indian Oil Corporation depot continues non stop, over 48 hours after it began. Eight people have been killed, four others are still missing and nearly 200 were injured in the crisis.

The government says the fire is likely to be doused by Sunday afternoon. But it has already inflicted colossal losses. Besides burning fuel worth Rs 500 crore, the fire has damaged hundreds of shops and factories, estimated at another Rs 500 crores. And it's ruined the lives and livelihoods of thousands of people in the area.

As the blazing fire rage on relentlessly, the havoc inflicted by flames from Jaipur's IOC depot is getting clearer. While two dozen factories were gutted, over 500 others in Sitapura Industrial area were badly damaged, like Ashok Singh's jewellery unit where the shattered glass and jewellery pieces are a sign of the disaster that the fire tragedy has left.

"I've lost crores and crores because of this fire. We have been totally ruined. We don't know what we will do now. We are just watching this tragedy helplessly," said Ashok Singh, owner, Jaipur Jewels.

But with so many factories damaged and closed, over 20,000 workers have suddenly become jobless. While many are currently surviving in relief camps, daily wage labourers don't know how they'll earn a living in future.

"I have been sitting idle ever since the fire. I have no idea how and when I will now earn some money to feed my children," said Mohan Lal, a labourer.

While the fire is now confined to just four of the depot's 11 containers, the heavy smoke billowing out poses major health hazards. Experts say these toxic fumes could trigger long-term complications for patients of asthma and respiratory diseases in the area.

Roofs have collapsed, factories have been damaged, glass has been shattered in this terrible tragedy. While all those may gradually be reconstructed, the big question is will the lives of the thousands who depend on this industrial area for a living ever be rebuilt.


Read more...

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி!

10/30/09




இந்தியாவில் இஸ்லாமிய முறையிலான வங்கித் திட்டத்தைத் துவக்கும் முயற்சிகளில் குறிப்பிடத் தக்க மிகப் பெரும் முன்னேற்ற நிகழ்வாகக் கடந்த 25.10.2009 அன்று ஒரு சந்திப்பு நடந்தது. இஸ்லாமியப் பொருளாதார இந்திய மைய ICIF ( Indian Centre for Islamic Finance) அமைப்பின் தூதுக் குழுவினர், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ அவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, "வட்டியில்லா இஸ்லாமிய வங்கித்திட்டம் இந்தியாவில் துவங்கிடத் தேவையான சாத்தியக் கூறுகளைப் பற்றி இந்திய ரிசர்வ் வங்க்கியின் கவர்னருடன் வெகு விரைவில் விரிவாக விவாதிப்பேன்" என்று தூதுக் குழுவினரிடம் அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

நிதியமைச்சரைச் சந்தித்த பின்னர் தூதுக்குழுவின் பிரதிநிதி அப்துர் ரகீப், "நிதியமைச்சர் அவர்களிடம் நாங்கள் சமர்ப்பித்த மூன்று பக்க அறிக்கையை அவர் மிகவும் ஆர்வத்துடன் பொறுமையாகப் படித்துப் பார்த்தார். குறிப்பாக, 'வட்டியில்லாப் பொருளாதாரத்தைப் பரவலாக்கிடப் பெருமளவில் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை' என்றும் இது, 'நடைமுறையில் உள்ள வங்கிமுறைகளோடு ஒத்திசைவாக அமைய வேண்டும்' என்றும் குறிப்பிடப் பட்டிருக்கும் ரகுராம் ராஜன் அவர்களின் நிதித்துறை சீரமைப்புக் குழு(Committee on Financial Sector Reforms - CFSR)வின் வட்டியில்லா வங்கித் திட்டத்தின் பரிந்துரைப் பகுதிகளைக் கவனமாகவும் பொறுமையாகவும் நிதியமைச்சர் வாசித்தார்" என்று கூறினார்.
வட்டியில்லா வங்கி முறை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பயனளிப்பதாகும். மலேசிய வட்டி இல்லா வங்கிகளில் 40% வாடிக்கையாளர்கள் சீனர்கள் ஆவர். பிரிட்டன் வங்கிகளின் 20% வாடிக்கையாளர்கள் முஸ்லிம் அல்லாதவர்.

மேலும், "CFSRஇன் பரிந்துரை, 'புதுமையான வழிமுறைகளின் சேர்க்கைகள் மூலம் பொருளாதார வளர்ச்சி' எனும் குறிக்கோளுக்கு ஒத்துள்ளது. மேலும் முறையான ஆய்வுகள் செய்து அதன் பின்னர் திட்டம் வகுத்து, நடைமுறைப் படுத்தப்படும் செயல் திட்டங்களின் மூலம் எவ்விதப் பக்க விளைவுகளோ அபாயமோ இல்லாததும் எளிதில் சாத்தியமாகக் கூடியதுமே வட்டியில்லா வங்கித் திட்டம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அப்துர் ரகீப் தெரிவித்தார்.அவர் மேலும் தொடர்ந்து குறிப்பிடுகையில், "வட்டியில்லா வங்கி முறை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பயனளிப்பதாகும். மலேசிய வட்டி இல்லா வங்கிகளில் 40% வாடிக்கையாளர்கள் சீனர்கள் ஆவர். பிரிட்டன் வங்கிகளின் 20% வாடிக்கையாளர்கள் முஸ்லிம் அல்லாதவர். மேலும், "இஸ்லாமியப் பொருளாதாரமும் அதன் கோட்பாடுகள் சார்ந்த சமூகநல நோக்கமும் பொறுப்பும் உள்ள முதலீகள் என்பன - அவை எதுவுமற்ற - நடைமுறையில் உள்ள வங்கித் திட்டத்திற்குச் சிறந்த மாற்றுவழியாகும்" என்று வாடிகன் ஆட்சி மன்றம் மேற்குலக வங்கிகளுக்குப் பரிந்துரைத்து இருப்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்" என்று கூறினார்.

கேரள அரசின் (Rs.1000 crore) ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் துவக்கப்பட்ட இதே அடிப்படையிலான இஸ்லாமிய முதலீட்டு நிறுவனம் பற்றியும், அதைப் பொருளியல் ஆய்வாளர்களான Ernst & Young நிறுவனத்தினரின் ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளுக்குப் பின்னர் உலகளாவிய இஸ்லாமிய வங்கியாக மாற்றும் திட்டமும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைத் திருத்திய பின்னர் நிறைவேற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தேர்ந்து கொள்வதற்காக நிதியமைச்சரிடம் அளிக்கப் பட்ட மனுவில் குறிப்பிடப் பட்டுள்ள ஐந்து அம்சத் தீர்மானங்களுள் :

* நிர்வாக வழிகாட்டல்கள்

* நிதி ஒதுக்கீடு

* நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றல்

ஆகிய பகுதிகள் நிதியமைச்சரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன.

ரிசர்வ் வங்கியின் கவர்னரை அடுத்த வாரம் சந்தித்து இது விஷயமாகப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நிதியமைச்சர் கூறினார். மேலும் அவர் விரைவில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அங்கிருந்து நவம்பர் இரண்டாவது வாரம் திரும்பிய பின்னர் இது விஷயமாக ICIF பிரதிநிதிகளும் நிதியமைச்சகச் செயலாளர்கள், மற்றும் வங்கித்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என்று நிதியமைச்சர் கூறியதாகவும் அப்துர் ரகீப் கூறினார்.


Read more...

பெஷாவரில் குண்டு வெடிப்பு; 87 பேர் பலி!

10/29/09

பெஷாவர்: இன்று பாகிஸ்தானில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகப் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் வெடி குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 80 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் பயணமாக வந்து சென்ற நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

இந்த ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்வாகும். இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிக்ச்சை அளித்து வருகின்றனர், வடமேற்கு மாகாண அதிகாரிகள் கூறும்போது 200க்கும் மேற்பட்டவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இத்தாக்குதலில் இதுவரை 87 பேர் பலியாகி இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக் குண்டு வெடிப்பில் மக்கள் நடமாட்டம் நிறைந்த மீனா பஜாரில் உள்ள ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் மசூதி ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கட்டிடங்களில் இருந்த சன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதாகவும் மேலும் 15 கடைகளும் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் எரிந்து நாசமாயின. என்றும் பாக். செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

இதன் வெடிச்சத்தம் பெஷாவர் நகரம் முழுக்க கேட்டதாகவும் இந்த வணிகப்பகுதியில் இருந்தவர்களில் அதிகமானோர் பெண்களே என்று ஒரு பெண்மணி கூறினார் இத்தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட புகை மண்டலத்தில் அதிர்ச்சியடைந்த மீண்டு பாதுகாப்பு அதிகாரிளுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுனர்.

மேலும் 25 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இத்தாக்குதலுக்கு பிறகு பெஷாவரில் உள்ள அனைத்து வணிக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன அதிபர் சர்தாரி வடமேற்கு மாகாண முதல்வரிடம் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்





Read more...