பள்ளி மாணவர் ஒருவரை நிர்வாணப்படுத்தி அவரை ஊர்வலமாகச் செல்ல உத்தரவிட்ட ஆசிரியருக்கு 1 இலட்சம் ரூபாய் அபாரதம் விதித்து டில்லி நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்த ஒரு மாணவன் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துவிட்டான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் அந்த மாணவனை அடித்து உதைத்தார். மேலும் இரக்கமற்ற முறையில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தி கொடூரமாக நடந்து கொண்டார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து மாணவர் கவுன்சில் சார்பில் டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் குப்தாவுக்கு ஒருவருட ஜெயில் தண்டனையும், 2,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியிருந்தார். அத்தீர்ப்பை எதிர்த்து டில்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. 12 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் சனிக்கிழமையன்று தீர்ப்பு கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பி.சி. குப்தா ரூ.1 இலட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி பிரதீபா ராணி உத்தரவிட்டார். மேலும், கொடூர தண்டனை வழங்கிய ஆசிரியர் குப்தாவுக்கு கண்டனமும் தெரிவித்தார்.
மாணவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்: ரூ.1 இலட்சம் நஷ்டஈடு
11/15/09
Labels:
India news.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment