Showing posts with label tamil nadu news.. Show all posts
Showing posts with label tamil nadu news.. Show all posts
சாதி கிறிஸ்துவர்களால் மலம் உண்ண நிர்ப்பந்திக்கப்பட்ட தலித் : திண்டுக்கல்லில் கொடூரம்
1/14/10
திண்டுக்கல் : தமிழகத்தில் இன்றும் நீடித்து வரும் தீண்டாமையின் அடையாளமாய் திண்டுக்கல்லில் ஒரு தலித் வாலிபர் சாதி கிறிஸ்துவர்கள் வசிக்கும் தெருவில் காலணிகள் அணிந்து நடந்து வந்ததற்காக மலம் உண்ண நிர்ப்பந்திக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மெய்கோவில்பட்டியில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் சடையாண்டி எனும் தலித் வாலிபர் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் “ உயர் சாதி கிறிஸ்துவர்கள் வசிக்கும் தெருவில் ஜனவரி 7 அன்று காலணி அணிந்து சென்றதற்காக என்னை அடித்து துன்புறுத்திய சாதி கிறிஸ்துவர்கள் கொடுமையின் உச்சகட்டமாக என்னை மலம் உண்ண நிர்ப்பந்தித்தனர்” என்று புகார் அளித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more...
Labels:
tamil nadu news.
விமான நிலையத்தில் ரூ.10 கோடி கார் எரிந்தது
11/23/09
சென்னை விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து பிரிவில் வெளிநாட்டுக்கு ஏற்றிச் செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள கார் எரிந்து நாசமடைந்தது.
விமான நிலையம் அருகே சரக்கு பிரிவு உள்ளது. இங்கிருந்து துபாய்க்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பெராரி என்ற வெளிநாட்டு காரை சரக்கு விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அந்த காரில் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தார்கள்.
சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக சீன நாட்டு விமானம் அருகே நின்று கொண்டிருந்தது. தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
Read more...
Labels:
tamil nadu news.
கோயில் கருவறையில் புணர்ச்சியில் ஈடுபட்ட பூசாரிக்கு போலிஸ் வலைவீச்சு!
11/15/09
சென்னை: கோவில் கருவறையில் செக்ஸ்லீலையில் ஈடுபட்ட காஞ்சீபுரம் அர்ச்சகர் தேவநாதன் திடீரென தலை மறைவாகி விட்டார் அவர் சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பிடிக்க காவல்துறையினரின் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (35). வாலாஜாபாத்தை அடுத்துள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த இவர் தான் பூஜை செய்து வந்த கோவிலை காமக்கூடாரமாக மாற்றி பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வந்தது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றல்ல...இரண்டல்ல... மொத்தம் 6 பெண்களுடன் தேவநாதன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு கள்ளக்காதல் மன்னனாக வலம் வந்துள்ளார். இவரின் செக்ஸ்லீலைகள் வெளிச்சத்துக்கு வந்ததால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. துரைராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இதனால் தேவநாதன் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் தொடர்ந்து தேவநாதன் போலீசுக்கு தென்படாமல் தலைமறைவாகவே இருந்து கொண்டிருக்கிறார்.
சென்னை நங்கநல்லூரில் தேவநாதனின் உறவினர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இதனால் சென்னையில் தேவநாதன் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது அர்ச்சகர் தேவநாதனுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்து விட்டது. எனவே எங்களது பிடியில் இருந்து அவர் எங்கும் தப்பிச்சென்று விட முடியாது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றனர்.
கோவில் என்று கூடபாராமல் தேவநாதனுடன் ஒன்றாக இருந்த பெண்கள் அனைவருமே குடும்ப பாங்கான பெண்கள் போல இருப்பதாக போலீசார் கூறினார்கள். இவர்களில் ஒரு பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். இவரைப்போல கோவிலுக்கு வந்த பல பெண்களுடன் நைசாக பேச்சு கொடுத்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வந்துள்ளார் தேவநாதன். இப்படி தேவநாதனின் காமப்பசிக்கு இரையான பெண்களின் பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஆபாச அர்ச்சகரின் செக்ஸ் படங்கள் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக ஆபாச படங்களை சி.டி.யில் பதிவு செய்து விற்பனை செய்யும் வக்கிர கும்பல் ஒன்று தேவநாதன் பெண்களுடன் செக்ஸ்லீலையில் ஈடுபடும் சி.டி.க்களை விற்பனை செய்வதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சி.டி. விற்பனை கும்பலை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
Read more...
Labels:
tamil nadu news.
Subscribe to:
Posts (Atom)