சென்னை விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து பிரிவில் வெளிநாட்டுக்கு ஏற்றிச் செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள கார் எரிந்து நாசமடைந்தது.
விமான நிலையம் அருகே சரக்கு பிரிவு உள்ளது. இங்கிருந்து துபாய்க்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பெராரி என்ற வெளிநாட்டு காரை சரக்கு விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அந்த காரில் தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தார்கள்.
சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக சீன நாட்டு விமானம் அருகே நின்று கொண்டிருந்தது. தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
விமான நிலையத்தில் ரூ.10 கோடி கார் எரிந்தது
11/23/09
Labels:
tamil nadu news.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment