http://i50.tinypic.com/29mlkww.jpg

அசாருதீன் மீதான ஆயுட் கால தடையை நீக்கக் கோரிக்கை

11/23/09



காங்கிரசை சேர்ந்த சிலர் ஐசிசி யின் துணைத் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவாரை சந்தித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மீதான ஆயுட்க்கால தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



கடந்த 2000 ஆண்டில் எழுப்பப் பட்ட கிரிக்கெட் சூதாட்டப் புகார் காரணமாக அசாருதீன், ஷர்மா மற்றும் ஜடேஜாவுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப் பட்டது. சில வருடங்கள் கழித்து ஜடேஜாவின் தடை விலக்கிக் கொள்ளப் பட்டது.

கடந்த தேர்தலில் அசாருதீன் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி க்கள் ஜிதின் பிரசாத் , ராஜ் பப்பர், இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரிய நிதிக் குழுவின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் சுக்லா போன்றோர் சரத் பவாரை சந்தித்து அசாருதீன் மீதான தடையை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளனர்.

0 comments

Post a Comment