http://i50.tinypic.com/29mlkww.jpg

புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் மரணம்

10/29/09

டேவிட் தலை சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான டேவிட் ஷெப்பர்ட் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68 . டேவிட் ஷெப்பர்ட் கடந்த வருடம் திருமணம் செய்த ஜென்னி என்ற மனைவியுடன் வசித்து வந்தார்.

1965 ம் வருடம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ஷெப்பர்ட் குலொஸெஸ்டர்ஷியர் அணிக்காக விளையாடியுள்ளார். 92 டெஸ்ட் போட்டிகளுக்கும், மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டி உட்பட 172 ஒருதின போட்டிகளுக்கும் நடுவராக பணி புரிந்துள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த அவருடன் பணி புரிந்த சக நடுவர் டிக்கி பேர்ட் கூறுகையில் டேவிட் ஷெப்பர்ட் ஒரு சிறந்த நடுவர் , சிறந்த மனிதர், பல மணி நேரங்களை இருவரும் மகிழ்ச்சியாக கழித்துள்ளோம் என்று தெரிவித்தார்.




0 comments

Post a Comment