http://i50.tinypic.com/29mlkww.jpg

டெண்டுல்கர் மீது சிவசேனா பரபரப்பு குற்றசாட்டு

11/23/09



மும்பை அனைவருக்கும் சொந்தம் என்று தெரிவித்த சச்சின் டெண்டுல்கரை சிவசேனா தலைவர் பால் தாக்கரே விமர்சித்து அதன் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சச்சினை வம்புக்கு இழுத்துள்ளது சிவசேனா.



சிவசேனாவின் கட்சிப் பத்திரிக்கையான சாம்னாவில் அக்கட்சியின் ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில் டெண்டுகர் எந்த மராட்டிய வீரருக்கும் உதவியது கிடையாது , பிசிசிஐக்காக டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுகிறாரே தவிர இந்தியாவுக்காக அல்ல என்று சாடியுள்ளார். மேலும் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பெற்ற புகழ் அவர் ஒரு மராத்தியர் என்பதை விட பெரிது இல்லை என்றும் தெரிவித்துள்ளார் சஞ்சய் ராவத்.

சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது பல மராத்திய வீரர்களுக்கு இந்திய அணி சார்பில் விளையாட ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கொடுத்தார் என்றும் டெண்டுல்கர் அவரது நெருங்கிய நண்பரான வினோத் காம்ப்ளிக்கு கூட உதவ வில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

0 comments

Post a Comment