http://inneram.com/images/news/general/lincoln_letter.jpg
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கனின் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிட்டத்தட்ட 28 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஜார்ஜ் பேட்டன் என்ற அமெரிக்கர் சிறுவனாக இருந்த போது அப்போதைய அதிபராக இருந்த லிங்கனைத் தனது தந்தையுடன் சென்று சந்தித்துள்ளார்.
அப்போது ஜார்ஜ் பேட்டன் லிங்கனைச் சந்தித்ததைத் தனது நண்பர்களிடன் உறுதி செய்யத் தனக்கு ஒரு தாளில் சந்திப்பை உறுதி செய்து எழுதிக் கேட்டார். இதற்கு ஒப்புக் கொண்ட லிங்கன் அவ்வாறு எழுதித் தந்த கடிதம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
இக்கடிதத்தை விற்பனைக்கு வைக்கும் நிறுவனமான ராப் ஃபவுண்டேசன், இதன் தொடக்க விலையாக 60,000 அமெரிக்க டாலர்களை நிர்ணயித்துள்ளது.
ஆப்ரஹாம் லிங்கனின் கடிதம் 28 லட்சரூபாய்க்கு விற்பனை!
11/18/09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment