http://i50.tinypic.com/29mlkww.jpg

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே கண்டனம்

1/14/10



சில நாட்களுக்கு முன்பு நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க வழிவகை செய்யப் படும் என்று தெரிவித்தார்.

பிரதமரின் இந்த பேச்சு குறித்து சிவசேனாவின் நாளேடான சாம்னாவில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவதை நியாயப் படுத்த முடியாது என்றும் இந்தியா அதன் மைந்தர்களிடம் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல மாறாக அவர்கள் இந்தியாவுக்கு வந்து அவர்களது அனுபவம் அறிவைக் கொண்டு இந்தியாவை முன்னேற்ற தங்களது பங்களிப்பை செய்வதையே , வாக்களிக்கும் உரிமையை விட இதுவே முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார் .



0 comments

Post a Comment