
பிரிட்டன்: பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பிரிட்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பான இஸ்லாம்4 - யூகே என்னும் அமைப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஈராக்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செய்த மனித உரிமை மீறல்கள்,படுகொலைகள்,போர்க்குற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து இந்த அமைப்பு சவப்பெட்டி ஊர்வளத்தை நடத்த திட்டமிட்டிருந்த சமயத்தில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தத் தடைக்கான எந்த காரணத்தையும் குறிப்பிடாத பிரிட்டனின் உள்துறைச் செயளாலர் அலன் ஜோண்சன், தடை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றான போதிலும், பயங்கரவாதத்தை சமாளிக்க அது அவசியமான ஒரு அதிகாரம் என்று அவர் விபரித்துள்ளார்.
இந்த அமைப்பின் தலைவரான அஞ்சும் சௌத்ரி தமக்கு திவிரவாதிகளுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார். தமது ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பெயரின் கீழ் இயங்கமாட்டார்கள் என்றும், ஆனால், இஸ்லாத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனில் இஸ்லாமிய அமைப்புக்கு தடை
1/14/10
Labels:
International
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment