
தற்கொலையா, கொலையா என்று குழப்பமாகவே நீண்ட நாட்களுக்கு பின் அடக்கம் செய்யப்பட்ட பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்ஸனின் மரணம் கொலையே என்று அவருடைய இறப்பு சான்றிதழ் தெரிவிப்பதாக லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகையான நியூஸ் ஆப் வார்ல்டு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
அப்பத்திரிகை இறப்பு சான்றிதழின் அசலையும் அதன் திருத்தப்பட்ட பதிவையும் வைத்துள்ளது. ஜீலை 7 அன்று வெளியிடப்பட்டுள்ள முதல் சான்றிதழில் இறப்புக்கான காரணம் குறிப்பிடபடவில்லை. ஆனால் பின்னர் ஆகஸ்ட் 31 அன்று மருத்துவ ஆய்வாளர் கிறிஸ்டோபர் ரோஜர்ஸ் திருத்தப்பட்ட இறப்பு சான்றிதழில் கொலை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
ப்ரோபல் மற்றும் இதர மருந்துகளை அளவுக்கு அதிகமாக திட்டமிட்டு ஜாக்ஸனுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜாக்ஸனின் மரணத்தின் போதே சொத்துக்காகவோ, பகைக்காகவோ அல்லது மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை தடுப்பதற்காகவோ இக்கொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் ஜாக்சனின் மரணம் கொலையே – பரபரப்பு தகவல்
1/14/10
Labels:
International
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment